ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -எழுத்துடை நடுகல்

மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலய கானத்து .....
                      மதுரை மருதனிளநாகனார்,அகம்.343: 4-9
உரை: உப்பு வணிகனது வண்டியின் பொலிவில்லாத பூண் சிதையச் செய்த வலிய பாறையில் உள்ள நடுகல் வாடிய மாலையுடன் நீராட்டப் பெறாமல் இருந்ததினால்  அதில் கூரிய உளியால் இயற்றப் பெற்ற எழுத்துக்கள் மறைய,அவ்வழியிலேசெல்லும் புதியவர்க்கு வேறு பொருள் தருவனவாகப் பிறழ்ந்து காணப்படும்.இடங்கள் பொரிந்த கவர்த்த வழிகளை உடைய காடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக