கருணை நிறைந்த மாமனிதர்கள்
பனையூர் … இச்சிற்றூரில் ஒரு பெரியவர் இருந்தார் அவர் வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் கொஞ்சம் அரிசியை எடுத்துத் தாளில் மடித்துச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு போவார், அவர் செல்லும் வழியில் இருக்கின்ற எறும்புக் குழிகளில் கொஞ்சம் கொஞ்சம் அரிசி போட்டுக்கொண்டே போவார்
நான் மைசூரில் குடியிருந்தபொழுது நாள்தோறும் காலையில் பல்கலைக் கழக வளாகத்தில். நடைப் பயிற்சிக்குச் செல்வது வழக்கம். நாள்தோறும் நண்பர் ஒருவர் , ஒரு பை நிறையத் தண்ணீர்க் குடுவைகளுடன் நடைப் பயிற்சிக்கு வந்து அங்குள்ள செடி கொடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றிச் செல்வார்.
நான் தற்பொழுது சென்னை வேளச்சேரியில் குடியிருக்கிறேன். நாள்தோறும் காலையில் நான் பால் வாங்கச் செல்லும் வழியில் நண்பர் ஒருவர் ஒரு பையில் நிறைய ரொட்டிகளுடன் வருவார் வழியில் காணும் நாய்களுக்கெல்லாம் ரொட்டித் துண்டுகளைப் போட்டுக்கொண்டே போவார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் மனங்கள் வாழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக