வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந்தகர் பாடுவிறந்து இயல
காவட்டனார்,அகம்.378:6,7
உரை: வேறு வேறு வகையினவாகிய மலையில் வாழும் வருடைகளின், கொம்புகள் பொருந்திய இளைய கடாக்கள் ஒலியைக் கேட்டு அஞ்சி இரிய.. எனப்படுவதாவது வருடை- மலையில் வாழும் ஒருவகை விலங்கு. இது முதுகில் காலுடையதும் எட்டுக் கால் உடையதும் எனப் பல திறப்படுதலால், வேறு வேறு இனத்த வருடை எனப்பட்டது. மாவும் மாக்களும் என்னுஞ் சூத்திரத்து, பேராசிரியர் கிளை யென்பன எண்கால் வருடையும் குரங்கும் போல்வன. எண் காலவாயினும் மா வெனப்படுதலின் வருடை, கிளை ஆயிற்று என்றுரைத்ததும் மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள், வரைவாழ் வருடை என்னுமிடத்து முதுகிடத்தே கொண்ட நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினையுடைய வளைந்த காலையுடைய வரையிடத்தே வாழும் எண் கால் வருடை என நச்சினார்க்கினியர் உரைத்தலும் காண்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக