திங்கள், 5 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - என்ன அழகான உவமை இது

தூ மலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மா இதழ்க் குவளை மலர் பிணைத்து அன்ன
திரு முகத்து அலமரும் பெருமதர் மழைக் கண்
                              எயினந்தை மகனார் இளங்கீரனார், அகம். 361:1-3
உரை: தூய மலராகிய தாமரைப் பூவிடத்தே கரிய இதழகளை உடைய குவளை மலர் இரண்டினைப் பிணைத்து வைத்தாற் போன்று அழகிய முகத்திடத்தே சுழலும் பெரிய குளிர்ந்த கண்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக