செவ்வாய், 13 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -காதல் திருமணம் கொடுமையா?

தன் ஓரன்ன ஆயமும் மயில் இயல்
என் ஓரன்ன தாயரும் காணக்
கைவல் யானைக் கடும் தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர்ப் புரையோர் அயர
நன்மாண் விழவில் தகரம் மண்ணி 
ஆம் பல புணர்ப்பச் செல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்
அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ
வளையுடை முன்கை அளைஇக் கிளைய
\பயில் இரும் பிணையற் பசுங்காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றிக் கூந்தல்
ஆடுமயில் பீலியில் பொங்க நன்றும்
தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி
உள்ளாது கழிந்த முல் எயிற்றுத் துவர்வாய்ச்
சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
                      குடவாயிற் கீரத்தனார்,அகம்.385

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக