வியாழன், 8 டிசம்பர், 2011

தொலைக் காட்சிகள்


tதமிழ்த் தொலைக் காட்சிகள்
 இந்தியத் தொலைக் காட்சிகளில் முதல் (பல) முறையாக….. செத்த பாம்பை அடித்துச் சொத்து சேர்த்த  தமிழ்த் தொலைக் காட்சிகள், யார் யாரோ எடுத்த படங்களையெல்லாம் துண்டு துண்டாக… சுருள் சுருளாக…. படம் படமாக ஓட்டிப் பணம் சேர்த்ததோடு நாட்டைக் குட்டிச் சுவராக்கிய இந்த நாசகாரக் கும்பலை என்ன செய்வது ? இவையெல்லாம் தொலைக்காட்சிகளா? நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?
 அயல் நாட்டவர் நடத்தும் டிஸ்கவரி, வரலாறு  முதலிய தமிழ்த் தொலைக் காட்சிகளைக் காணுங்கள் மக்களுக்கு எதைச் சொல்லவேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும்  என்பதை அவர்கள் எவ்வளவு தெளிவாகச் செய்கிறார்கள் என்பது புரியும்.
தமிழ்த் தொலைக்காட்சிகளில்……
பெண்களை இழிவுபடுத்தும் நெடுந் தொடர்கள், குழந்தைகளைக் கூத்தாடிகளாக்கும் ஆடல் பாடல் போட்டிகள், சூதாட்டங்கள், தமிழ்க் கொலை வெறிப் பாடல்கள் , மூடநம்பிக்கையை வளர்க்கும் காட்சிகள்,கட்டவிழ்த்து விடப்பட்ட ஆபாசங்கள்  காதலை விள்க்கும் கூத்தாடி வன்முறைகள், குடிக்க கடைகள் திறந்து விட்டுக் குடிக்காதே விளம்பரங்கள், கூத்தாடிகள் நடத்தும் கூத்தாடித் தொலைக்காட்சிகளில் கூத்தாடிக் கொடுமைகள்  கொஞ்சமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக