வியாழன், 8 டிசம்பர், 2011

நம் நாடு..

வணக்கம்
வாழ்ந்தால் நம் மண்ணில் வாழ்வோம்-மடிந்தால் நம் மண்ணிலேயே மடிவோம். உடன் பிறந்தார் போல் ஒன்றி வாழவே ஆசைப்படுகிறோம் அன்பான கன்னடர்களே தெலுங்கர்களே மலையாளிகளே நமக்குள் ஏன் பிணக்கு. அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு ஆட்பட்டு நாம் நம்மை இழக்கலாமோ? தமிழின்றித் தனித்து இயங்குமா கன்னடமும் தெலுங்கும் மலையாளமும். தமிழினமின்றித் தனிப் பெருமை உங்களுக்கு ம் உண்டோ ? அல்லது தமிழ் நாடின்றித் தனித்து இயங்கமுடியுமா உங்களால் ? உங்களால் முடியுமென்றால் எங்களாலும் முடியும் .
என்ன செய்வது, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆயிரக்கணக்கான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி வைத்தார்கள் நம் முன்னோர்கள் இன்றோ வெறிநாய்கள் வேட்டையாடி அவற்றையெல்லாம் அழித்துவிட்டன. அண்டை மாநிலங்களில் கையேந்தும் அளவுக்கு எங்களை ஆளாக்கிவிட்டனர் வந்தேறிகள். தன்மானமுள்ள தமிழர்களே, நமக்கென ஒரு தமிழரசை உருவாக்குவோம் . நாம் கொள்ளவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டாம். வாழ்ந்தால் இந்த மண்னில் வாழ்வோம் - மடிந்தால் இந்த மண்ணிலேயே மடிவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக