செவ்வாய், 27 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -முன்னோர் பெருமை

தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி 
முழுது ஆண்டோர் வழி காவல
                                  (குறுங்கோழியூர் கிழார், புறம்.17:1-8)
உரை:தென் திசையில் கன்னியையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும்  எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும். இங்கு, குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும் கோல் செங்கோலாகவும் உரிய இறைப் பொருளுண்டு நடுவுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் நெடுஞ்செழியனும் போரிட்டனர், போரின் முடிவில் இரும்பொறையைச் செழியன் சிறையில் பிணித்தான், அங்கிருந்து தப்பித் தன் அரசு கட்டில் ஏறிய தன்மையை இப்பாட்டுள் குறுங்கோழியூர் கிழார் குறிப்பிடுகின்றார்.










0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக