வியாழன், 15 டிசம்பர், 2011

திருக்களர் மு.சுவாமிநாத.....


தமிழ்ப்பணி:
இம்மகானின் சைவப் பணியும், தமிழ்ப்பணியும் அளவிடற்கரியதாகும். நவீன வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் நாடு முழுவதும் நடையாய் நடந்து நற்பணியாற்றியுள்ளார். இவரெழுதிய சைவசமயமும் தமிழ்ப்பாடையும் (1921) என்றும் நூலில் தமிழின் பெருமைகளை வியந்து போற்றியுள்ளார். அக்காலத்திலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அவர் எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கனவாகும். நம்முடைய தமிழ்த் தேயத்திலே பூர்வீகத் தமிழர் மரபிலே பிறந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் கூடிய வரையில் முயற்சி செய்து ஆங்காங்கு பற்பல தமிழ்ப் பாடசாலைகளை ஏற்படுத்தி (இடைக் காலத்தில் சொரூப பேதமடைந்த ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, னா, னை, னெ, னே  இவ்வெழுத்துக்களுக்குப் பதிலாக ஆதிகாலத்திலிருந்தபடி ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, இவ்வெழுத்துக்களை அமைத்தும், ஆரிய பாடையிலிருந்து சேர்ந்திருக்கும் ஐ, , , க்ஷ, ஹ இவ்வெழுத்துக்களில் வகையறா அறுபத்தைந்து எழுத்துக்களை நீக்கியும்) சுத்தத் தமிழில் யாவும் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இவரெழுதிய  நூல்கள் பல. இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவரெழுதிய நூல்களைப் பற்றி இவரே குறிப்பிட்டுள்ளார். திருக்களர்ப்புராணம், திருக்களர்ச்சார சங்கீரகம் திருக்களர் விளக்கம் ( 2,3,4, பாகங்கள்) திருக்களர் வீரசேகரஞான தேசிகர் சரித்திரம், களப்பாள் கசேந்திரவரதர் புராணம், களப்பாள் சிவசேத்திர விளக்கம், திருச்சிற்றேமம் சிவசேத்திர விளக்கம். திருவிடும்பாவனம் சிவசேத்திர விளக்கம். முப்பொருள்  விளக்கம் (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதிமகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை, பஞ்சாக்கர மகிமை) திருவிடைவாய் கல்வெட்டினின்று 1917-ம் வருடங்கண்டு பிடித்தது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருவிடைவாய்த் தேவாரம், சைவ சமயமும் தமிழ்ப்பாட்டையும், சூரியகுலக் கள்ளர் சரித்திரம். செந்தமிழாரம்பப் போதனாமுறை என்னும் புத்தகங்களை அச்சிற் பதிப்பித்து பலருக்கும் இனாமாகக் கொடுத்தார். கள்வர் கோமான் என்னும் பத்திரிகையும் நடத்தினார் என்ற செய்திகளை அறிய முடிகிறது.
                                                    களப்பாள் குமரன்

1 கருத்து: