வெள்ளி, 9 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - வளமனையும் வறுமையும்

நீங்குதல் இல்லாத நல்ல புகழினை உடைய சோழரது உறையூர் போன்ற செல்வமுடைய நல்ல மனையில் புதுவதாக ஒப்பனை செய்து தன் தமராவார் மணம் செய்விக்கவும் மனம் பொருந்தாதவளாகிய என் மகள் சீரும் சிறப்பும் இல்லாது சிறிய ஊரில் வறுமையுற்ற பெண்டினது புல் வேய்ந்த குடிசையில் ஒரு பசு கட்டியுள்ள ஒற்றைத் தூண் கொண்ட முகப்பினையுடைய இயைபில்லாத வறிய மனையில் சிலம்பு கழித்து அவனுடன் மணம் பொருந்தினளோ என யான் வருந்துவேன்
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்லென நோவல் யானே
                           நக்கீரர், அகம்.369:22-26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக