திருக்குறள்
– சிறப்புரை :533
பொச்சாப்பார்க்கு
இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும்
துணிவு.
---- ௫௩௩
மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிக் கடமையை மறந்தவர்களுக்குப் புகழ்மை என்னும்
பேறு கிடைப்பதில்லை, இஃது உலக அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
“
கருமம் சிதையாமே கல்வி கெடாமே
தருமமும் தாழ்வு படாமே பெரிதும் தம்
இல்நலமும்
குன்றாமே ஏரிளங் கொம்பு அன்னார்
நல்நலம்
துய்த்தல் நலம். ---- நீதிநெறிவிளக்கம்.
நன்றையா.
பதிலளிநீக்கு