திருக்குறள்
– சிறப்புரை :541
செங்கோன்மை
ஓர்ந்துகண்
ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. ---- ௫௪௧
ஒருவன் செய்த குற்றத்தின் தன்மை அறிந்து, ஒரு பால் கோடாது, குற்றத்திற்குரிய
தண்டனையை நடுவர்களைக் கொண்டு ஆராய்ந்து, தீர்ப்பு அளித்தலே நீதி வழங்கும் முறையாகும்.
“ முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். –குறள் . 388
நீதிநெறி தவறாது ஆட்சிசெய்து , குடிமக்களைப் பாதுகாக்கும் மன்னன், மக்களுக்கெல்லாம்
இறைவன் என்று சொல்லத்தக்க சிறப்பைப் பெறுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக