திருக்குறள்
– சிறப்புரை :549
குடிபுறங் காத்தோம்பிக்
குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன்
தொழில். ~~~
௫௪௯
ஒரு நல்ல அரசனுக்குரிய கடமைகளாவன :
குடிமக்களைப் புறப் பகையினின்று
காத்தலும் நாட்டை வளப்படுத்தி மக்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்தலும் அரசனின் முதன்மைப்
பணிகளாம். நாட்டில் குற்றம் புரிவோர்க்குத் தகுந்த தண்டனை அளித்தல் தவறாகாது
அஃதும் அரசனின் கடமையே.
“குழவி
கொள்வாரின் குடி புறந்தந்து
நாடல்
சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடு
கோட்பாட்டுச் சேரலாதன் ….. பதிற்றுப்பத்து.
குழந்தைகளைப் பாதுகாப்பாரைப் போலத் தன் குடிகளைப் பாதுகாத்து. அறத்தையே
ஆராயும் மனத்தை உடையவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக