திருக்குறள்
– சிறப்புரை :538
புகழ்ந்தவை
போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு
எழுமையும் இல்.
---- ௫௩௮
சான்றோர் போற்றிப் புகழ்ந்த செயல்களையே செய்யவேண்டும் , அங்ஙனம் செய்ய மறந்தார்க்கு எப்பிறவியிலும் நன்மை இல்லை.
“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்றுஅறி உள்ளத்துச் சான்றோர்.” -- பதிற்றுப்பத்து.
மக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை
உடைய சான்றோர்.
நன்று.
பதிலளிநீக்கு