திருக்குறள்
– சிறப்புரை :555
அல்லற்பட்டு
ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத்
தேய்க்கும் படை.
~~~ ௫௫௫
கொடுங்கோல் மன்னனின் ஆட்சியில்
மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரே - கொடுங்கோலன் செல்வ வளத்தை அழிக்கும் படையாகும்.
“கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” ~~ கலித்தொகை.
சுற்றத்தினர் மனம் வருந்தும்படியாகத்
தேடிக் குவித்த செல்வங்கள்… பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே
தேய்ந்து அழியும்..
நன்று.
பதிலளிநீக்கு