செவ்வாய், 30 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :554

திருக்குறள் – சிறப்புரை :554
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. ~~~ ௫௫
செங்கோல் வளைய  அறனழிந்த செயல்களைச் செய்யும் மன்னன்.  குடி மக்கள் பழிதூற்ற. வளமிழந்து நாடு நலியக் குற்றம் பெருகிக் கொற்றம் சிதையும்.
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்து விடல்.  பழமொழி

ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக் கொடுத்தல், குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.

3 கருத்துகள்:

  1. இன்னும் எளிமைப்படுத்தினால் (இலக்கிய நடையை நீக்கி, மு.வ. போன்று எளிய நடையில்), பாமரரும் படிக்க இயலும்.

    "கொடுப்பதற்கு ஒப்பாகும்" என எளிமைப்படுத்தலாம்.
    உங்கள் தெளிவுரைகளை யாருக்காக எழுதுகிறீர்கள் என்பதனை நீங்கள் முதலில்
    முடிவு செய்ய வேண்டும் அன்பரே!
    கற்றோருக்கு உங்கள் தெளிவுரைகள்
    சிறப்பாக அமைகிறது.நன்றி.

    பதிலளிநீக்கு