திருக்குறள்
– சிறப்புரை :550
கொலையிற் கொடியாரை
வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்டு அதனோடு
நேர்.
~~~ ௫ ௫0
மன்னன் நாட்டில் உலவும் மிகக் கொடியவர்களுக்கு மரணதண்டனை
வழங்குவது. உழவன் பயிர்களைக் காப்பற்ற களைகளைக்
களைதற்கு ஒப்பானதாகும்.
“ இளை இனிது தந்து விளைவு முட்டுறாது
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.” ~~ பதிற்றுப்பத்து.
வேந்தே( பல்யானச் செல்கெழுகுட்டுவன்) நீ நாட்டினை
இனிதாகக் காத்துப் பயிர் விளைச்சல் குறையாதபடி செய்து குடிமக்கள் அனைவரும் பகை. பசி.
பிணி என்னும் துன்பங்கள் இன்றி அமைதியாக வாழும்படி ஆட்சி செய்தலே பெருமை உடையதாம்.
( கள்வனைக் கோறல் கடுங்கோலன்று………. ~~ சிலம்பில் பாண்டிய மன்னன் கள்வனைக் கொன்றொழித்தல்
அரச நீதி என்பான்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக