திருக்குறள்
– சிறப்புரை :534
அச்சம் உடையார்க்கு
அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப்பு
உடையார்க்கு நன்கு.
---- ௫௩௪
இயல்பாகவே அஞ்சும் மனநிலை கொண்டவர்களுக்கு, அவர்களைச்சுற்றி எவ்வளவுதான் பாதுகாப்பு இருந்தாலும்
அதனால் பயன் ஒன்றும் இல்லை. அதுபோலக் கடமையை
மறந்து களிப்பில் கிடப்பவர்களுக்கும் அறிவார்ந்த சுற்றம் இருப்பினும் அதனால் நன்மை
ஏதும் விளைவதில்லை.
“
கைஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
சொல்
ஞானம் சோர விடல்.------ நாலடியார்.
அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல
வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக..
நன்று.
பதிலளிநீக்கு