செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-237.

 

தன்னேரிலாத தமிழ்-237.

தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ

 வாங்கு மருப்பு யாழொடு பல்லியங் கறங்கக்

 கைபயப் பெயர்த்து மையிழுது  இழுகி

ஐயவி சிதறி ஆம்பல்  ஊதி

இசைமணி எறிந்து காஞ்சி பாடி

நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇக்

காக்கம் வம்மோ காதலம் தோழி…” –புறநானூறு, 281.

போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர், மனையைத் தூய்மை செய்து இனிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையையும் மனையிறைப்பில் செருகி, யாழுடன் பல இசைக் கருவிகள் ஒலிக்க,  இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்து, அன்புடைய தோழியேகாப்போமாக வருக..!

பண்டைய தமிழ் மக்கள் மரபு. மருத்துவம் அறிந்து இன்புறுக.

1 கருத்து:

  1. ஐயா, இரவமரமென்பது தற்சமயம் உள்ளதா? உண்டெனில் அது எப்பெயரில் அழைக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு