தன்னேரிலாத
தமிழ்-245.
“காந்தளம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செங்கோட்டு
ஆமான்
ஊனொடு
காட்ட
மதனுடை
வேழத்து
வெண்கோடு
கொண்டு
பொன்னுடை
நியமத்துப்
பிழி
நொடை
கொடுக்கும்.”
–பதிற்றுப்பத்து, 30.
காந்தள் பூவினால்
செய்த கண்ணியையும் கொலை செய்யும்
வில்லினையும் உடைய
வேட்டுவர், சிவந்த
கொம்பையுடைய காட்டுப்
பசுவின் இறைச்சியோடு, வலிமையான
காட்டுயானையின் கொம்புகளையும் எடுத்துக்கொண்டு, செல்வம்
பொருந்திய கடைத்தெருவிற்குச் செல்வர்,
அங்குத் தாம் வாங்கும் கள்ளுக்கு விலையாகக்
காட்டுப் பசுவின்
இறைச்சியையும் யானையின்
தந்தத்தையும் கொடுப்பர்.
அருமையான பண்டமாற்று.
பதிலளிநீக்கு