ஞாயிறு, 14 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-254.

 

தன்னேரிலாத தமிழ்-254.

பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றி

கழிபெருங் காமநோய் வாங்கி வழிபடாது

ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்து நீ

நாடிக்கொள் மற்று ஓர் இடம். ” –அறநெறிச்சாரம், 189.

 நெஞ்சே….! பேராசையாகிய காம நோயை வளர்த்துக்கொண்டு, என் வழிக்கு வராமல், பெண்கள் மாட்டு இரங்கிச் செல்கின்ற மனமே, நீ பழி பாவங்களுக்கு அஞ்ச மாட்டாய். என்னைவிட்டு நீங்கிச் சென்று, அடைவதற்குரிய வேறு ஓர் இடத்தை விரைவாகத் தேடிக் கொள்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக