சனி, 13 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-253.

 

தன்னேரிலாத தமிழ்-253.

நல்வினை நாற்கால் விலங்கு நவை செய்யும்

கொல்வினை அஞ்சிக் குயக்கலம் நல்ல

உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்

இறுதியில் இன்ப நெறி..”அறநெறிச்சாரம், 138.

நன்மைகளைத்தரும் செயல்களைச் செய்ய முயல் ( நாற்கால் விலங்கு) ; துன்பத்தைத் தரும் கொடிய தீவினைகளை அஞ்சி அகல் ( குயவர் ஆக்கும் அகல்) ; உயிருக்கு நன்மைதரும் உறுதிப் பொருள்களைத் தழுவு (புல்அனுடநாள்)  ; உறுதிப் பொருள்கள் அல்லாதவற்றை முனி ( வெறுத்தல்) இவற்றைப் பின்பற்றினால் இறுதியில் பெறுவது வீடு பேறாம். (இப்பாடலில் முயல், அகல், புல், முனி ஆகிய சொற்கள் சிலேடையாக அமைந்துள்ளன.).

1 கருத்து: