தன்னேரிலாத
தமிழ்-258.
“ நல் அறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்
கல்வி
என்
தோழன்
துணிவு
எம்பி
அல்லாத
பொய்ச்
சுற்றத்தாரும்
பொருளோ
பொருள்
ஆய
இச்
சுற்றத்தாரில்
எனக்கு.”
–அறநெறிச்சாரம், 161.
தலைசிறந்த
அறமே என் தந்தை ; காப்பன காத்து, கடிவன கடியும் அறிவே என் தாய் ; நன்மை தீமைகளை உணர்வதற்குக்
காரணமான கல்வியே என் தோழன் ; தக்கன துணியும்
மனத் தெளிவே என்
தம்பி ; சிறந்த
உறுதியைப் பயக்கும்
இச் சுற்றத்தாரைக்காட்டிலும் தந்தை,
தாய், தோழன்,
உடன்பிறந்தார் என்று
அழைக்கப்படும் பொய்ச்
சுற்றத்தார் எமக்கு
உறுதி பயப்பரோ..? இல்லை என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக