வியாழன், 4 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-247.

 

தன்னேரிலாத தமிழ்-247.

புலை மயக்கம் வேண்டிப் பொருட் பெண்டிர்த் தோய்தல்

கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல் சொலை முனிந்து

பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இம்மூன்றும்

நன்மை இலாளர் தொழில்.”----திரிகடுகம், 39.

உடலின்பம் வேண்டி விலைமகளைச் சேர்வதும்; கள் குடித்தலாகிய பிறர் எச்சிலைப் பருகுதலும்; பொய் சூழும் இடமாகிய சூதாடு களத்திற்குச் சென்றடைதலும் ஆகியன, சான்றோர் சொல் மறுத்த, அறநெறி அறியா அற்பர்களின் தொழில்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக