வெள்ளி, 5 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-248.

 

தன்னேரிலாத தமிழ்-248.

கொலை அஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார்

களவு ஒன்றோ ஏனையவும் செய்வார் பழியோடு

பாவம் இஃது என்னார் பிறிதுமற்று என்செய்யார்

காமம் கதுவப்பட்டார்.”நீதிநெறிவிளக்கம், 79.

காம வேடகையால்  பற்றப்பட்டவர்கள் கொலை செய்ய அஞ்சமாட்டார்கள் ; பொய்சொல்ல வெட்கப்படமாட்டார்கள் ; மானத்தை இழக்காமல் பாதுகாக்க மாட்டார்கள் ; களவு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பல தீய செயல்களைச் செய்வார்கள் ; இக்காமம் பழியோடு பாவத்தையும் சேர்க்கும் என்றும் கருதமாட்டார்கள்.; அப்படிப்பட்டவர்கள் செய்யாத தீமைகளே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக