தன்னேரிலாத
தமிழ்-252.
”பொய்யான் புலாலொடு கள் போக்கித் தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால்; என்றும்
அயல அயலவா நூல். – ஏலாதி, 14.
“ கயல் போலும்
கண்ணை உடையவளே…!
இயல்பாகவே ஒருவன்,
பொய் கூறான்,
புலால் உண்ணான், கள் குடியான், தீமைகள் செய்யான், சிற்றினம்
சேரான், பிறரை இகழ்ந்து
பேசான் என்னும் அருங்குணங்கள் வாய்க்கப்பெற்றானாயின், உண்மையில் அவனுக்கு, அறிவுநூல்கள்
எவையும் வேண்டுவனவல்ல.
அருங்குணங்களை அறிந்தேன்.
பதிலளிநீக்கு