தன்னேரிலாத
தமிழ்-260.
“பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும் நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்.” -புறநானூறு,
44.
பால் இல்லாது குழந்தைகள்
அழுகின்றனர்; மகளிர் பூவின்றி
வெறுங் கூந்தலை முடிக்கின்றனர்; நல்ல வேலைப்பாடு
அமைந்த வீட்டில்
உள்ளோர் நீர் இல்லாது வருந்திக்
கூவுகின்றனர் ; இனியும் இங்கே இருத்தல்
கொடுமையன்றோ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக