புதன், 3 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-246.

 

தன்னேரிலாத தமிழ்-246.

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்

விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய்க்

கள் உண்டு வாழ்வான் குடிமையும்இம்மூன்றும்

உள்ளன போலக் கெடும்.” ---திரிகடுகம், 59.

சுற்றத்தார்க்கு உதவாதவன் செல்வமும் ; பசுமைப்பயிர்போற்றித் தனக்குப் பயன் கொடுக்கும் காலத்துப் பாதுகாக்காதவன் உழவுத் தொழிலும் ; இளமைக் காலந்தொட்டே கள் உண்டு வாழ்வன் குடிப்பிறப்பும்  ஆகிய இம்மூன்றும் நிலைப்பன போலத் தோன்றிக் கெட்டழியும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக