செவ்வாய், 16 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-255.

 

தன்னேரிலாத தமிழ்-255.

போற்று குரு கிளைஞர் பொன்னாசையோர்க்கு இல்லை

தோற்று பசிக்கில்லை சுவைபாகம் தேற்று கல்வி

நேசர்க்கு இலை சுகமும் நித்திரையும் காமுகர்தம்

ஆசைக்கு இல்லை பயம் மானம். ---நீதிவெண்பா, 74.

பொன்னாசை மிக்கவர்களுக்கு ஆசிரியரும் உறவினர்களும் இல்லை ; பசிக்கு இனிய சுவையோ சிறந்த உணவோ தேவையில்லை ; கல்வியில் விருப்பம் கொண்டவர்க்கு இன்பத்திலும் தூக்கத்திலும் நாட்டம் இல்லை ; காம விருப்பு உடையவர்களுக்கு அச்சமும் மானமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக