·
சங்கு-
ஓர் ஆய்வு –14.-
தமிழர் இசைக்கருவிகள்
1: திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர்
திருக்கோயில்
சங்குதீர்த்தக்குளத்தில் வியாழக்கிழமை புனித சங்கு
உருவானது.சங்குதீர்த்தக்குளத்தில்சங்கு உருவாகும் வரலாறு குறித்து திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்திருக்கோயில் செயல் அலுவலர் கோ.சரவணன் கூறியது:
மார்க்கண்டேயர்அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டுவிட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரிசமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்ததாகவும், அங்கு அவர் பூஜைசெய்யும் போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லாததால் அவர்
பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்ததாகவும்,
அப்போது
சங்குதீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியதாகவும்,
அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாகவும் தலவரலாறு
கூறுகிறது. இதனையடுத்து 12 ஆண்டுக்கு
ஒருமுறை சங்குதீர்த்தக்
குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து
பூஜித்து
வருவதாகவும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம்
கடைசி சோமவாரத்தில்
வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்
நடைபெறும்போது
சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில்முதன்மைபெறும்.இதற்கு
முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம்
தினத்தில்
சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12
ஆண்டுக்குப்பிறகு தற்போது விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை
சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரை ஒதுங்கியது. புனித
சங்குக்கு
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு,
சதுரங்கப்பட்டினம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித சங்கை கண்டு
தரிசனம்செய்து வருகின்றனர்.
நன்றியுடன்……………………………
தினமணி,
தமிழ் தமிழ் அகரமுதலி
முற்றும்.