தமிழமுது –195– தொல்தமிழர் இசை மரபு:55.
3. ஐங்குறுநூறு . இசை நரம்பு , ஒலிபோல் இனிய சொல்.”
”அலங்கு இதழ் நெய்தல் பொற்கை முன் துறை
இலங்கு முத்து உுறைக்கும் எயிறு கெழு துவர் வாய்
அரம் போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவி அவளே.” அம்மூவனார். 185.
ஆயமகளிருள் நின்னால் விரும்பப்பட்டவள் யாவள் ? என வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது.
பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை துறைமுகத்தகடற்கரையில் நெய்தல் பூக்கள் அசைந்தாடுவதைப் போன்ற சாயலையும் விளங்கும் முத்துக்களை ஒக்கும் பற்களைக் கொண்ட சிவந்த வாயினையும் அரத்தால் அறுத்து வேலைப்பாடமைந்த அழகிய வளையல்களை அணிந்தவளும் இசை நரம்பின் யாழிசைைபோலும் இனிய சொல்லை உடைய குறுமகளே என்னால் விரும்பப்பட்டவளாவாள் என்றான்.
சீறியாழ் பாணன்:
” கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே
எம்மின் உணரார் ஆயினும் தம்வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே.” -பேயனார், 472.
சி றிய யாழை உடைய பாணனே, நும் தலைவர் குறித்த பருவம் வந்தும் அவர் வாராமையால் பொய்யுரைத்தமை அறியார் ஆதலின் யான் நோவேனோ? என்றனள் தோழி. .........................................................தொடரும்........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக