திருக்குறள்
– சிறப்புரை :503
அரியகற்று
ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை
அரிதே வெளிறு. --- ௫௰௩
கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்
நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை
இல்லாமை அரிது. (வெண்மை – அறியாமை…) --பரிமேலழகர்.
:”
கல்வி கரையில கற்பவர் நாள் சில.” -- நாலடியார்.
கல்வி எல்லையற்றது ; கற்பவர்களின் நாட்கள் சிலவே.