வெள்ளி, 2 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :557

திருக்குறள் – சிறப்புரை :557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு ~~~ ௫௫
மண்ணில் மழைத்துளி இன்றேல் உயிர்கள் எத்தகைய கொடிய துன்பத்தைத் துய்க்குமோ  அத்தகைய கொடிய துன்பத்தை மக்களுக்குத் தரக்கூடியது அரசனின் அருள் இல்லாத ஆட்சிமுறை.
“ அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.” ~ சிலப்பதிகாரம்.

ஆற்றலுடைய அரசர்கள் முறையாக ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழுடைய பெண்டிர்க்குக் கற்பு நெறியும் சிறப்பாக அமையாது என்பது பண்டைய சான்றோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.

1 கருத்து:

  1. அரசனின் அருள் என்பது இவ்விடத்தில் அரசனின் நல்லாட்சியா? அருள் என்பதற்கு நல்ல, நேர்மையான, கருணையான என்று பொருள் கொள்ளலாமா ஐயா?

    பதிலளிநீக்கு