திருக்குறள்
– சிறப்புரை :560
ஆபயன் குன்றும்
அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான்
எனின்.
---- ௫௬0
மன்னன், மக்களைக் காக்கத் தவறினான் எனின் நாட்டில் பசுக்கள் பால்தரா,
ஆறுவகைப்பட்ட தொழில்களைச் செய்வோர் தாம் கற்றவற்றை மறந்துவிடுவர். (வேறு தொழில் நாடிச்
செல்வர்.)
“
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடுஇன்று பெருகிய திருவின்
பாடுஇல் மன்னரைப் பாடன்மாரே.”
– புறநானூறு.
பலவாறு எடுத்துக் கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் அறிவில்லாத, பெருஞ்
செல்வத்தைப் பெற்றுள்ள, பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.
சிறப்பு.
பதிலளிநீக்கு