திருக்குறள்
– சிறப்புரை :570
கல்லார்ப் பிணிக்கும்
கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப்
பொறை.
---- ௫௭0
கொடுங்கோலன், கல்வியறிவில்லாத மூடர்களையே தன் சுற்றமாகக் கொள்வான் ; அம்மூடர்கூட்டத்தைத்
தவிர நிலத்திற்குச் சுமையாக இருப்பது வேறு ஒன்றுமில்லை.
“
நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும்
குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்.” – நான்மணிக்கடிகை.
அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப் பெருமையும்
கல்லாமையால் கெடும்.
நன்று.
பதிலளிநீக்கு