திருக்குறள்
– சிறப்புரை :578
கருமஞ் சிதையாமல்
கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ்
வுலகு.----- ௫௭௮
ஆற்றும் கடமையில் இழுக்கு நேராவண்ணம் கருணை புரிய வல்லார்க்கு இவ்வுலகம்
உரிமை உடையது.
“
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம்
அறிந்து உணர்க என்ப மாதோ.”---- நற்றிணை.
கொடிய தீமை செய்வோரைக் கண்டவிடத்தும், அவர் உள்ளம் வருந்தி உணருமாறு,
இனி அவ்வாறு செய்யாதிருக்க என்று பலமுறை எடுத்துக்கூறிப் பொறுத்திருப்பர் பெரியோர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக