திருக்குறள்
– சிறப்புரை :573
பண்என்னாம்
பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம்
இல்லாத கண்.
--- ௫௭௩
பாடலோடு பொருந்தி வராத பண்ணால் என்ன பயன் அதைப்போல அருள்நோக்கு இல்லாத
கண்ணால் என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை என்பதாம்.
உடம்பிற்கே
ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்க்
கிடந்து
உண்ணப் பண்ணப்படும்” – நாலடியார்.
நிலையற்ற இந்த உடம்புக்கே உதவி
செய்துகொண்டு வாழாமல் இறந்தபின் செல்லும் மேலுலகில் இருந்து இன்பம் நுகர்வதற்கான செயல்களையே
செய்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக