திருக்குறள்
– சிறப்புரை :565
அருஞ்செவ்வி
இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது
உடைத்து.
---- ௫௬௫
காட்சிக்கு எளியனாக இல்லாதவனாகவும்
கருணையற்ற கொடுமுகம் கொண்டவனாகவும் விளங்கும் அரசன் பெருஞ் செல்வம் உடையவனாயினும் அவனைப் பார்ப்பது ஒரு பேயைப் பார்ப்பதைப் போன்றதாம்.
“ நோற்றோர்
மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்
பிறர்கொள விளிந்தோர்…
--- அகநானூறு.
ஒருவருக்கும்
பயனின்றி வறிதே இறத்தலின்றிப் பிறர் பயன் கொள்ளுமாறு தம் பொருளை விடுத்து இறந்தோர்,
நல்வினை செய்தோராவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக