திருக்குறள்
– சிறப்புரை :572
கண்ணோட்டத்
துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப்
பொறை.
--- ௫௭௨
மக்கள் வாழ்க்கைமுறையே கண்ணோட்டத்தில்தான் அமைந்துள்ளது ; கண்ணோட்டம்
இல்லாதார் உண்மையில் இந்த நிலத்திற்குப் பெரும் சுமையே.
“
தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும்
துணையும் அறம் செய்க.” –பழமொழி.
அரிதாகிய மக்கள் பிறப்பைப் பெற்றதனால், இயன்றவரை அறம் செய்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக