திருக்குறள்
– சிறப்புரை :569
செருவந்த போழ்திற்
சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து
கெடும்.
---- ௫௬௯
போர் வந்துற்றபோது பாதுகாப்பு
அரண்களை அமைக்கத் தவறிய மன்னன், போர் முகங்காண அச்சமுற்று அடங்கி விரைந்து அழிவான்.
“
வாழாமையின் வழிதவக் கெட்டுப்
பாழாயின நின் பகைவர் தேஎம்” –
மதுரைக்காஞ்சி.
வேந்தே,,! நின்னுடைய ஏவலைக் கேட்டுப் பணி செய்து வாழாது நிலைகெட்டுப்
பகைத்தமையால் அவர்தம் நாடுகள் பாழாயின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக