திருக்குறள்
– சிறப்புரை :576
மண்ணோடு இயைந்த
மரத்தனையர் கண்ணோடு
இயைந்து கண்ணோடா
தவர்.
---- ௫௭௬
கண்ணிருந்தும் அருளொடு பொருந்திய பார்வை அற்றவர்கள் மண்ணொடு பொருந்திய
மரத்திற்கு ஒப்பாவர்.
“
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.---
குறள். 9997.
அரத்தைப் போலும் கூர்மையான அறிவுடையரே ஆயினும் ஆறறிவு உடைய மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவு உடைய மரத்திற்கு ஒப்பாவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக