திருக்குறள்
– சிறப்புரை :558
இன்மையின் இன்னாது
உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப்
படின்.
---- ௫௫௮
நீதிநெறி தவறிய அரசனின் கீழிருந்து வாழும் செல்வ வளமுடைய வாழ்க்கை, கொடிய
வறுமை சூழ்ந்த வாழ்க்கையைவிடக் கொடுமையானதாகும்.
“”
குடிகொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா
மடிகொன்று
பால் கொளலும் மாண்பே குடிஓம்பிக்
கொள்ளுமா
கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின்
மேலும் பல.” --- நீதிநெறி விளக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக