ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-34 எண்ணித் துணிக ….!


தன்னேரிலாத தமிழ்-34
எண்ணித் துணிக ….!

செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது அன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு
நல்குடியைக் காத்த நகுலனை முன் கொன்ற
பொற்கொடியைச் சேர்துயரம் போல். ---நீதிவெண்பா.

 நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆராய்ந்து பார்க்காமல் தன் குழந்தையைப் பாதுகாத்த கீரிப்பிள்ளையைக் கொன்றுவிட்டுப் பின்னால் வருந்திய பார்ப்பனப் பெண்ணைப் போல் நினைந்து நினைந்து வருந்த வேண்டியிருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக