செவ்வாய், 21 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 41


தன்னேரிலாத தமிழ் - 41

ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோது ஒழீஇக் கொள்கை முதுக்குறைவு நேர்நின்று
காக்கை வெளிது என்பார் என்சொலார் தாய்க்கொலை
சால்புடைத்து என்பாரும் உண்டு.” –நீதிநெறிவிளக்கம்.

காக்கைக்கு எதிரிலேயே நின்றுகொண்டு அதன் நிறம் வெண்மை என்று சொல்பவர்கள் வேறு என்னதான் கூறமாட்டார்கள்..? தாய்க்கொலை புரிதல்கூடப் பொருத்தமான செயலே என்று கூறுகின்றவர்களும் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள் ; ஆகவே பிறர் என்ன கூறினாலும் அவர்கள் கூறுவதில் குற்றம் பொருந்தியவைகளை நீக்கிவிட்டு குணம் மிக்கவைகளையே கொள்ளுதல் வேந்தனுக்கு அறிவுடைமையாகும். எனவே எதையும் ஆராய்ந்து பார்த்து நல்லவற்றைக் கொள்வதே வேந்தனின் கடமையாகும்.


1 கருத்து:

  1. 'காக்கை வெளிது' என்ற கருத்தில் முரண்பாடு காணப்பட்டாலும் நமது பன்பாட்டைச் சிதைத்து உணர்வை பாதிப்பது 'தாய்க்கொலை சால்புடைத்து' என்பது. 'தாய்க்கொலை சால்புடைத்து' ஓசை நயம் இருப்பினும் உலகப் பண்பாட்டுக்கு சாவு மணி அடிக்கிறது.

    பதிலளிநீக்கு