திங்கள், 20 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 40


தன்னேரிலாத தமிழ் - 40

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
 கல்மேல் எழுத்துப்போல் காணுமே அல்லாத
 ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
 நீர்மேல் எழுத்திற்கு நேர். ---- வாக்குண்டாம்.

நற்குணம் உடைய ஒருவருக்குக் காலத்தால் நாம் செய்த உதவியானது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தைப்போல என்றைக்கும் அழியாமல் நிலைத்திருக்கும். நற்குணம் இல்லாதவர்களுக்குச் செய்த உதவியானது நீரில் எழுதப்பட்ட எழுத்தைப்போல் விரைவாக அழிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக