ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 39


தன்னேரிலாத தமிழ் - 39

சந்தனத்தைச் சேர் தருவும் தக்க மணம் கமழும்
சந்தனத்தைச் சார் வேய் தழல்பற்ற அந்த வனம்
தானும் அச் சந்தனமும் தன் இனமும் மாள்வதன்றித்
தானும் கெடச் சுடுமே தான். ----நீதிவெண்பா.

சந்தன மரத்தின் பக்கத்தில் உள்ள வேறுவகை மரங்களும் சந்தனத்தின் மணம் பெற்று விளங்கும்.ஆனால் சந்தன மரத்தின் அருகில் உள்ள மூங்கில்கள் தீப்பற்றிக் கொண்டால், தான் அழிவதோடு தன் இனமான பிற மூங்கில்களையும் சந்தனமரத்தையும் சேர்த்து எரிக்கும். எனவே, தீயோரை அண்மையில் நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக