வெள்ளி, 24 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 43


தன்னேரிலாத தமிழ் - 43

சிறுமுயற்சி செய்து ஆங்கு உறுபயன் கொள்ளப்
 பெறும் எனில் தாழ்வரோ தாழார் அறன் அல்ல
எண்மைய வாயினும் கைவிட்டு அரிது எனினும்
ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார்.”  ---நீதிநெறிவிளக்கம்.

செய்து முடிப்பதற்கு எளிதாக இருந்தாலும் அறநெறிக்குப் புறம்பானவற்றைச் செய்தலை ஒழித்து, செய்வதற்கு அரியதாக இருந்தாலும் அறநெறியிலிருந்து பிறழாமல் ஒழுகிப் பயன் அடைவோர் எளிய சிறு முயற்சி செய்து மிகுந்த பயனை அடைய முடியும் என்றால் அம்முயற்சியை மேற்கொள்ளத் தயங்க மாட்டார்கள் . எனவே மேலோர் நன்மைதரும் எம்முயற்சிக்கும் பின் வாங்கார்.

1 கருத்து:

  1. அறநெறியைக் கடைபிடித்தலின் சிறப்பைக் கூறியுள்ள விதம் அருமை ஐயா. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு