வியாழன், 23 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 42


தன்னேரிலாத தமிழ் - 42

அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக் கொண்டு
 ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார்
பிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து ஆங்கு
அறிமடம் பூண்டு நிற்பார் --- நீதிநெறிவிளக்கம்.

ஆற்றல் இல்லாதவர்கள் யாருக்கும் பயன்படாத செயல்களையே செய்தாலும் தம் செயல்களைப் பற்றிப் பெருமையாகப் பேசித் திரிவர்; ஆனால் ஆற்றல்மிக்கவர்கள் பயன்மிக்க செயல்களைச்
செய்தாலும்   அச்செயல்களின் பயன்களை அறியாதவர்களைப்
 போல அடங்கி ஒழுகுவர். எனவே செயல் திறன் அற்றவர் வீண் ஆரவாரமும் செயல் திறன் மிக்கவர்கள் அடக்கமும் கொண்டு ஒழுகுவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக