தன்னேரிலாத தமிழ்-26
அன்பெனும் அருங்குணம்
“ சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.” –நற்றிணை.
தம்மை அடைக்கலமாக
வந்தடைந்தோர்க்கு, அவர்தம்
துன்பத்தைப் போக்கிப்
பாதுகாத்து, இனிய
தன்மையனாய் இருக்கும்
அருங்குணச் செல்வத்தையே
, சான்றோர், செல்வம் என்று
உயர்த்திப் பேசுவர்.
“ அம்ம வாழி தோழி அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்… “ --- குறுந்தொகை.
தோழி..! அன்பிற் சிறந்த நம்
அன்னைக்குக் கைம்மாறாகக்
கருதுமிடத்து உயர்ந்த
உலகமாகிய துறக்கமும்
சிறிதாகும்.
“ ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்
மாதோ.” --- புறநானூறு.
ஒருநாள் அல்ல
; இரண்டு நாள்
அல்ல ; பலநாளும் பலரொடும் மீண்டும்
மீண்டும் சென்றாலும்
முதல்நாள் போலவே
அன்பு காட்டும்
பண்புடையவன் அதியமான்.
“ சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல்புணர்வு உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு
உள்ளன ஆறு குணமாக.” – ஏலாதி.
நண்பர்கள் இறந்தவிடத்து
தாமும் பிரிவாற்றாது
இறத்தலும் ; வறுமையுற்றபோது பொருள் கொடுத்து
உதவி செய்தலும்
; இன்சொல் கூறுதலும்;
கூடியிருத்தலை விரும்புதலும்
; வருந்தும்போது வருந்துதலும் ;
பிரியும் காலத்தில்
உள்ளம் கலங்குதலும் ஆகிய இந்த ஆறு
குணங்களும் உண்மையான அன்புடைய நண்பர்களுக்கு இருப்பனவாகச்
சான்றோர் கூறுவர்.
” அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
பெரும் பேர் அன்பினர் தோழி … “ – அகநானூறு.
தலைவி.. ! பெறுதற்கரிய பொருள் விருப்பத்தால்
தலைவர் நம்மைவிட்டுப்
பிரிந்து சென்றார்
ஆயினும் நம்மீது
பேரன்பு உடையவர்.
இப்படி ஒரு செல்வம். ரசித்தேன் ஐயா.
பதிலளிநீக்குஅன்பெனும் அருங்குணத்தைப் பற்றிய கருத்துக்களை அருந்தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் விளக்கிடும் அரிய பதிவு. இனிய வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு