தன்னேரிலாத தமிழ்-38
”மனத்த கறுப்பு எனினும் நல்ல செயினும்
அனைத்து எவையும் தீயவே ஆகும் எனைத்துணையும்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே
மாசில் மனத்தின் அவர். “—நீதிநெறிவிளக்கம்.
ஒருவன் கறைபடிந்த
உள்ளம் கொண்டவன்
என்றால் அவனுக்கு
மற்றவன் நன்மை
தருவனவற்றையே செய்தாலும்
அவை அனைத்தும்
தீமை தருவனவாகவே
தோன்றும்.மாறாக நல்ல உள்ளம்
கொண்டவர்களுக்குஅளவின்றித் தீமைகளையே செய்தாலும்
அவை நன்மை
தருவனவாகவேஅவர்கள் கொள்வர்.
எனவே நன்மை
தீமைகள் அவரவர்
மனத்தைப் பொறுத்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக